Saturday, 1 October 2016

குடிநீர் - இரத்தத்தின் இணையற்ற பந்தம்

கடந்த மதம் பத்தாம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன்.
 மருத்துவரின் அறிவுரைபடி இரத்த  பரிசோதனை நிலையத்திற்கு கடந்தவாரம் சென்றிருந்தேன் .
சென்னையில் இருத்து கடந்த வாரம் ஈரோடிற்கு பேருந்தில் பயணம் செய்து , பேருந்து நிலையத்தில் இருந்து நேராக இரத்த  பரிசோதனை நிலையத்திற்கு சென்றுவிட்டேன்.
இரதம் எடுக்க நரம்பை தேடினார் இரதம் எடுப்பவர், இடது கையில் ஊசியை ஏற்றினார்  நரம்போ சிக்கவே இல்லை. என்னை பார்த்து ரத்தம் எடுப்பவர் கேட்டார் ,
ரத்தம் எடுப்பவர் : தம்பி குடிநீர் பருகினார்களா?
நான் : இல்லை அண்ணா, ஊரில் இருந்து அப்படியே இங்குதான் முதலில் இங்குதான் வருகிரேன், குடிநீர் பருகவில்லை அண்ணா.
ரத்தம் எடுப்பவர் : குடிநீர் பருகினால்தான் நரம்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கும் .

காலை எழுந்தவுடன் ஏன் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள் என்பது அன்றுதான் புரிந்தது.

-எல்லாம் நன்மைக்கே...