Saturday, 1 October 2016

குடிநீர் - இரத்தத்தின் இணையற்ற பந்தம்

கடந்த மதம் பத்தாம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தேன்.
 மருத்துவரின் அறிவுரைபடி இரத்த  பரிசோதனை நிலையத்திற்கு கடந்தவாரம் சென்றிருந்தேன் .
சென்னையில் இருத்து கடந்த வாரம் ஈரோடிற்கு பேருந்தில் பயணம் செய்து , பேருந்து நிலையத்தில் இருந்து நேராக இரத்த  பரிசோதனை நிலையத்திற்கு சென்றுவிட்டேன்.
இரதம் எடுக்க நரம்பை தேடினார் இரதம் எடுப்பவர், இடது கையில் ஊசியை ஏற்றினார்  நரம்போ சிக்கவே இல்லை. என்னை பார்த்து ரத்தம் எடுப்பவர் கேட்டார் ,
ரத்தம் எடுப்பவர் : தம்பி குடிநீர் பருகினார்களா?
நான் : இல்லை அண்ணா, ஊரில் இருந்து அப்படியே இங்குதான் முதலில் இங்குதான் வருகிரேன், குடிநீர் பருகவில்லை அண்ணா.
ரத்தம் எடுப்பவர் : குடிநீர் பருகினால்தான் நரம்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கும் .

காலை எழுந்தவுடன் ஏன் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள் என்பது அன்றுதான் புரிந்தது.

-எல்லாம் நன்மைக்கே...

Monday, 26 September 2016

இயற்கை கொடுத்த வாய்ப்பா இல்லை வரமா இல்ல சாபமா ?

எங்கள் குடும்பத்தில் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு இரவு உணவு அளிப்பதாக முடிவுசெய்து அங்கே சென்றிருந்தோம், இருப்பது குழந்தைகள் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்.
அந்த குழந்தைகள் காப்பகத்தின் ஒரு பொறுப்பாளரிடம் பேசிவிட்டு உணவு பரிமாறும் இடத்திற்கு சென்றிறுத்தோம்.
உள்ளே சென்றவுடன் அனைத்து குழந்தைகளும் எழுந்து நின்று கைகூப்பி  பாடல்  ஒன்றை  பாடினர். மனம்  ஒரு நொடியில்  உடைந்துவிட்டது  , நம்மை  போல  பல  ஜீவன்  வாழும்  விதத்தை கண்டு  கண்ணில் தண்ணீர்  முடியாது. காற்றை  கொண்டு  மறைத்து  விட்டேன்.

இது இயற்கை கொடுத்த வாய்ப்பா  இல்லை வரமா இல்ல சாபமா ?

மறந்துவிடாதே மனித நீ ஏழையாகவோ இல்லை பணக்காரனாகவோ இரு ஆனால் இயற்கையிடம் என்றுமே பிச்சை எடுத்தே ஆகவேண்டும்.

- எல்லாம் நன்மைக்கே 

Wednesday, 21 September 2016

காற்றின் கரிசனம்

நேற்று முன்தினம் காலை அலுவலகத்திற்கு சென்னை மாநகர பேருந்தில் சென்றுகொண்டிருதேன். இடம் இல்லாததால் நின்றுகொண்டே பயணம் செய்தேன். பேருந்தில் எதிரெதிரே இருஇரு இருக்கைகள், இரண்டு ஜன்னலோரத்திலும் முகம்தெரியாத ஆண்ங்கள். மதிற்றொருபக்கம் இருந்த இரண்டு இருக்கைகளில் பெண்கள். அந்த இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள்.
பேருந்து நிறுத்தம் ஒன்று வந்தவுடன் ஒருபக்கம் இருந்த இளைஞன் தனது இருக்கையில் இருந்து வெளியே வர முற்பட்டபொழுது எதிரே இருந்த பெண்ணின் சுடிதார் சால்வையின் கடைநிலை பாகங்கள் பேருந்தின் தரையை உரசிக்கொண்டிருந்தது. அவன் வெளியே வர சிறிதே ஓர் தென்றல்  அந்த பெனின் சால்வை தீண்ட நகர்ந்தது. அடுத்த நொடி அவன் அந்த சால்வை முன் இருந்த இடத்திலே காலைவைத்தான் தெரியாமல்.

இந்த இயற்கையின் அழகை நான் பார்த்ததற்கும்  பார்க்கவைத்ததற்கும் இயற்கைக்கு நன்றி!!!

- எல்லாம் நன்மைக்கே

மனதின் வேகம் எதுவோ அதுவே வாழ்வின் காலம்

காலம் கடப்பது காற்றை போல கடந்தால் 
வாழ்நாளை அனுபவித்து கடக்கிறோம் -காலமோ

தென்றலை போல கடந்தால் மனதில்
சிறியதொரு சலனத்தோடு செல்கிறோம் - காலமோ

தண்ணிரில் நடந்து செல்வதுபோல் கடந்தால் 
வாழ்நாளில் தடுமாற்றத்தோடு பயணிக்கிறோம் காலமோ

கடல் மண்ணுள் புதைத்துக்கொண்டு பயணிக்க முயன்றால் வாழ்நாளை வசித்து முடித்துவிட்டோம் என்றுரைகும்....

இவற்றை புரிந்தோ புரியாமலோ வாழ்வை கடக்கும் மனித இனமே.....

- எல்லாம் நன்மைக்கே